ஒன்றிய உள்துறை செயலாளருக்கு பதவி நீட்டிப்பு

புதுடெல்லி: ஒன்றிய உள்துறை செயலாளராக அஜய் குமார் பல்லா பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், அஜய் குமாருக்கு மேலும் ஒரு வருடம் பதவி நீட்டிப்பு வழங்குவது என நியமனங்களுக்கான ஒன்றிய அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்துள்ளது. கடந்த 1984ம் ஆண்டு பிரிவு ஐஏஎஸ் அதிகாரியான அஜய்குமாரை கடந்த 2019ம் ஆண்டு இந்த பதவியில் அரசு நியமித்தது. தற்போது பதவி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதால் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 22ம் தேதி வரை இந்த பொறுப்பை வகிப்பார் என்று ஒன்றிய பணியாளர் நலத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: