ஐபோன், ஐபேட்களில் பாதுகாப்பு குறைபாடு: ஆப்பிள் நிறுவனம் எச்சரிக்கை

சான்பிரான்சிஸ்கோ: ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன், ஐபேட் உள்ளிட்டவை பிரபலமானவை. இந்நிலையில், ஐபோன், ஐபேட் மற்றும் மேக் கம்ப்யூட்டர்களில் பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பது தெரிய வந்துள்ளதாக ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நிறுவனத்தின் ஐபோன் எஸ் 6, அதன் பிறகு வந்த மாடல்கள், ஐபேட்டில் 5ஜி உள்பட பல்வேறு மாடல்கள், ஐபேட் புரோ, ஐபேட் ஏர் 2, மேக் கம்ப்யூட்டர்களில் இந்த குறைபாடுகள் இருப்பது கண்டறியப்பட் உள்ளது. எனவே, இந்த மாடல்களை வைத்துள்ளவர்கள் உடனே அப்டேட் செய்ய வேண்டும் என்று ஆப்பிள் நிறுவனம் வலியுறுத்தி உள்ளது. சில ஐபோட் மாடல்களிலும் பாதிப்பு ஏற்படலாம் என்று கூறப்பட்டு உள்ளது. இது குறித்து ஆப்பிள் நிறுவனத்தின் முதன்மை நிர்வாக அதிகாரி ரேச்சல் டோபக் கூறுகையில், ‘‘இந்த மாடல்களில் ஹேக்கர்ஸ் நுழைந்து முக்கியமான தகவல்களை திருடக்கூடும். குறிப்பாக, சமூக செயற்பாட்டாளர்கள், பத்திரிகையாளர்கள் போன்றவர்களின் செல்போன்களை வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் ஹேக்கர்கள் தங்களின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து முழுமையாக உளவு பார்க்க வாய்ப்பு உள்ளது,’’ என்றார். 

Related Stories: