அதிமுக ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டது கொடிவேரி அணையில் கான்கிரீட் தளம் சேதம்: மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது

கோபி: கோபி அருகே உள்ள கொடிவேரி அணையில் ரூ. 2.65 கோடியில் கட்டப்பட் கான்கிரீட் தளம் மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. ஈரோடு மாவட்டம் கோபி அருகே பவானி ஆற்றில் கொடிவேரி அணை உள்ளது. கடந்த 2021ம் ஆண்டு அதிமுக ஆட்சிக்காலத்தில் சுற்றுலா வளர்ச்சி துறை சார்பில் ரூ.2.65 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அணையின் கீழ் பகுதியில் ஆழமுள்ள இடங்களில் சுமார் 100 மீட்டர் சுற்றளவில் கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டு, பாதுகாப்பாக குளிக்க தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் கன மழை காரணமாக அணைக்கு வந்த  25 ஆயிரம் கன அடி உபரி நீர் முழுமையாக வெளியேற்றப்பட்டது இதனால் பவானி ஆற்றில் வெளியேற்றப்பட்ட  25 ஆயிரம் கன அடி உபரி நீரும் கொடிவேரி அணையில் இருந்து வெளியேறியது. இதில் ரூ.2  கான்கிரீட் தளம் முற்றிலும் அடித்து செல்லப்பட்டு மீண்டும் குழிகள் ஏற்பட்டுள்ளது. கான்கிரீட் தளம் அடித்து செல்லப்பட்ட தகவல் கிடைத்ததை தொடர்ந்து கான்கிரீட் தளம் அமைத்த ஒப்பந்ததார், ஹிட்டாட்சி இயந்திரத்தை வைத்து உடைந்த கான்கிரீட் துண்டுகளை அவசர அவசரமாக அப்புறப்படுத்தினார்.

Related Stories: