உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி கட்டணம் செப். 1ம் தேதி முதல் உயர்வு

உளுந்தூர்பேட்டை: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த செங்குறிச்சி சுங்கச்சாவடியில் வருகிற 1ம் தேதி முதல் வாகனங்கள் செல்வதற்கான சுங்க கட்டணத்தை உயர்த்தப்படுகிறது.  ஏற்கனவே கார், வேன், ஜீப் ஒரு முறை செல்வதற்கான கட்டணம் ரூ.55ஆக இருந்தது. தற்போது ரூ.10 உயர்த்தப்பட்டுள்ளது.  இலகுரக வாகனங்கள் ஒரு முறை செல்வதற்கு ரூ.100ஆக இருந்தது, தற்போது ரூ.115 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. டிராக் மற்றும் பஸ்களுக்கான கட்டணம் ரூ.200ல் இருந்து ரூ.230ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. பல அச்சுகள் கொண்ட வாகனங்கள் ஒரு முறை செல்ல ரூ.320ல் இருந்து ரூ.370ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: