இவ்ளோ தானா? நிறைய குடிங்க... இளைஞர்களுக்கு ஜப்பான் அழைப்பு

டோக்கியோ: கொரோனாவால் மது விற்பனை சரிந்து வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதால் கவலை அடைந்துள்ள ஜப்பான் அரசு, இளைஞர்களை அதிகமாக மது குடிக்கும்படி அழைப்பு விடுத்துள்ளது. குடி குடியை கெடுக்கும் என்பது நம்ம ஊர்ல மட்டும்தான். ஆனால், ஜப்பானில் இளைஞர்கள் மது அருந்தாமல் இருப்பதால் அந்நாட்டின் அரசுக்கே பிரச்னை உருவாகி உள்ளது. கடந்த இரண்டரை ஆண்டுகளாக கொரோனா  பரவல் காரணமாக கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஊரடங்கு காரணமாக வர்த்தகம், பொருளாதாரம் பாதிக்கப்பட்டது. ஜப்பானில், குறிப்பாக மதுபான விற்பனை வருவாய் வெகுவாக சரிந்துள்ளது. வருவாய் இழப்பின் காரணம் என்ன என்பதை அந்நாட்டின தேசிய வரி முகமை அமைப்பு கண்டறிந்துள்ளது.

கொரோனா தொற்றுக்கு பின் இளைஞர்களிடம் மதுபானம் அருந்தும் பழக்கம் குறைந்திருப்பதே, விற்பனை சரிவுக்கு காரணம் என கண்டறியப்பட்டு உள்ளது. இதனால், விற்பனை அதிகரித்து வருவாயை பெருக்க, ஜப்பான் அரசு இளைஞர்களை அதிகமாக குடிக்க வைக்கும் முயற்சிகளை எடுத்துள்ளது. இதற்காக போட்டியும், விற்பனையை அதிகப்படுத்துவதற்கான விளம்பர யோசனைகளை தெரிவித்தால் பரிசுகளும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இது இளைஞர்களின் ஆரோக்கியத்தை கெடுக்கும் என, அரசின் இச்செயலுக்கு ஒரு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Related Stories: