இந்தியாவுடன் அமைதி உறவு: பாக். பிரதமர் திடீர் விருப்பம்

இஸ்லாமாபாத்: இந்தியாவுடன் அமைதியான உறவு, காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு காண விரும்புவதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் விருப்பம் தெரிவித்துள்ளார். புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பாகிஸ்தானுக்கான ஆஸ்திரேலிய தூதர் நெய்ல் ஹாகின்ஸ் நேற்று முன்தினம் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பை சந்தித்தார். அப்போது பேசிய பிரதமர் ஷெரீப், ‘சமத்துவம், நீதி, பரஸ்பர கொள்கையின் அடிப்படையில் இந்தியாவுடன் அமைதியான உறவையே பாகிஸ்தான் விரும்புகிறது. ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் ஐநா பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களுக்கு உட்பட்டு நியாயமான, அமைதியான தீர்வு காணப்பட வேண்டும். இதில், காஷ்மீர் மக்களின் விருப்பம் முக்கியமானது,’ என்று கூறியுள்ளார்.

Related Stories: