இன்று 2வது ஒருநாள்: தொடரை வெல்ல இந்தியா முனைப்பு

ஹராரே: இந்தியா - ஜிம்பாப்வே அணிகள் மோதும் 2வது ஒருநாள் போட்டி, ஹராரேவில் இன்று பிற்பகல் 12.45க்கு தொடங்குகிறது. ஜிம்பாப்வே சென்றுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நேற்று முன்தினம் நடந்த முதல் போட்டியில், 10 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற இந்தியா 1-0 என முன்னிலை பெற்றது. இந்நிலையில், 2வது போட்டி இன்று நடைபெறுகிறது.

தொடர்ச்சியாக 2வது வெற்றியுடன் தொடரை கைப்பற்றும் முனைப்புடன் கே.எல்.ராகுல் தலைமையிலான இந்திய அணி களமிறங்குகிறது. முதல் போட்டியில் பந்துவீச்சாளர்கள் தீபக் சாஹர், சிராஜ், பிரசித், அக்சர் அபாரமாக செயல்பட்ட நிலையில், தொடக்க வீரர்கள் தவான், கில் ஆட்டமிழக்காமல் அரைசதம் விளாசி வெற்றியை வசப்படுத்தினர். தொடரை வெல்ல இந்தியாவும், பதிலடி கொடுக்க ஜிம்பாப்வே அணியும் வரிந்துகட்டுவதால், இன்றைய ஆட்டத்தில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கலாம்.

Related Stories: