×

சென்னை அரும்பாக்கம் ஃபெடரல் வங்கியில் கொள்ளையடிக்கப்பட்ட 31.700 கிலோ கிராம் நகைகள் மீட்பு: காவல்துறை தகவல்...

சென்னை : சென்னை அரும்பாக்கம் வங்கி கொள்ளையில் மீட்கப்பட்ட 31.700 கிலோ நகைகளின் விவரங்களை காவல்துறையினரால் தற்போது வெளியிடப்பட்டது. அரும்பாக்கத்தில் உள்ள ஃபெடரல் வங்கியில் கடந்த வாரம் நகை கொள்ளையடிக்கப்பட்டது. இதில் முதல் கட்டமாக 18 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அதை அடுத்து 10கிலோ, மற்றும் நேற்று ஆய்வாளர் வீட்டில் மூன்றரை கிலோ, இன்று இரண்டரை கிலோ என்று ஒரு தோராயமாக பறிமுதல் செய்யப்பட்ட நகைகளின் கணக்குகளை காவல்துறை தகவலாக வெளியிடப்பட்டது.

இந்நிலையில், கொள்ளையடித்த தங்க நகைகளின் அளவிலும், பறிமுதல் செய்யப்பட்ட தங்க நகைகளின் அளவிலும் முரண்பாடுகள் ஏற்பட்ட நிலையில், உண்மையாக கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எவ்வளவு என்ற சந்தேகம் நீடித்து வந்தது. இது தொடர்பாக காவல்துறை தரப்பில் 31.700 கிலோ நகைகள் 481 கவர்களில் இருப்பதாக தெரிவித்திருக்கிறார்கள். கொள்ளைபோன தங்கங்கள் 9 இடங்களில் இருந்து மீட்கப்பட்டுள்ளன. குற்றவாளி சந்தோஷிடம் 15ஆம் தேதி 15.951 கிலோ தங்க நகைகள் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் மீட்கப்பட்டது. குற்றவாளி பாலாஜியிடம் இருந்து யமாஹா 0.063 கிராம் தங்க காய் சங்கிலி பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும், குற்றவாளி சூர்யா பிரகாஷிடம் இருந்து 8.8 கிலோ தங்க நகை ஜெய் நகர் பூங்காவில் இருந்து மீட்கப்பட்டது. குற்றவாளி செந்தில் என்பவரிடம் இருந்து கோயம்புத்தூர் பேருந்து நிலையத்தில் 80 கிராம் தங்க நகை பறிமுதல் செய்யப்பட்டதாகவும், முக்கிய குற்றவாளியான முருகனிடமிருந்து 323 கிராம் தங்க நகை வைத்திருந்ததாகவும் அதில் தெரிவித்திருக்கிறார்கள். மேலும், ஆய்வாளர் அமல்ராஜ் வீட்டில் மட்டும் 6 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது. இன்று பாலாஜி என்ற குற்றவாளியிடம் 100 கிராம் தங்க நகையும், கோயம்புத்தூர் நகை கடையை சேர்ந்த நபரிடம் 63 கிராம் தங்கம், என 31.700 கிலோ தங்க நகைகள் 9 பேரிடம் இருந்து வெவ்வேறு இடத்தில் பறிமுதல் செய்யப்பட்டதாக காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது.   


Tags : Arumbakam ,Federal Bank ,Chennai , Burglary, Banking, Robbery, Jewellery, Police, Publishing
× RELATED சென்னை பட்டாளத்தில் பெயிண்ட் கடையில்...