திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரியில் பெண் டாக்டர் தூக்குப்போட்டு தற்கொலை: கடிதத்தில் உருக்கம்

திருவாரூர்: திருவாரூர் கலெக்டர் அலுவலக பின்புறத்தில் அரசு மருத்துவக்கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு 5 ஆண்டுகளுக்கான படிப்பில் 500 மாணவர்கள் படித்து வருகின்றனர். இதில் 100 மாணவ, மாணவிகள் பயிற்சி டாக்டராக பயிற்சி பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் நாமக்கல் மாவட்டம் மோகனூரை சேர்ந்த வேலுசாமி என்பவரது மகள் காயத்ரி(22) என்பவர் பயிற்சி டாக்டராக இருந்து வந்தார். இவர் மருத்துவக்க்கல்லூரியில் 2வது மாடியில் உள்ள விடுதியில் அறையில் தங்கி படித்து வந்தார். இந்த நிலையில் காயத்ரி நேற்று பயிற்சி பணிக்கு செல்லவில்லை. அவரது அறை கதவு நேற்று மாலை வரை நீண்டநேரமாக உள்பக்கமாக பூட்டியிருந்தது. இதனால் சக மாணவிகள், அறை கதவை தட்டினர். ஆனால் எந்த சத்தமும் இல்லை. இதையடுத்து மருத்துவக்கல்லூரி டீன் ஜோசப்ராஜிக்கு தகவல் கொடுத்தனர். தொடர்ந்து ஊழியர்கள் விரைந்து வந்து அறை கதவை உடைத்து பார்த்தனர்.

அப்போது அறையில் மின்விசிறியில் துப்பட்டாவால் காயத்ரி, தூக்கில் தொங்கினார். தகவலறிந்து வந்து திருவாரூர் தாலுகா ேபாலீசார்  விசாரணை நடத்தினர். மேலும் காயத்ரி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அதே மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் காயத்ரி, தங்கியிருந்த அறையில் அவர் எழுதிய கடிதத்தை கைப்பற்றினர். அதில், நான் மனஅழுத்த        நோயால் அவதிப்பட்டு வந்ததால் தற்கொலை செய்து ெகாண்டேன். வேறு எந்த காரணமும் இல்லை என்று உருக்கமாக எழுதியுள்ளார்.

இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், காயத்ரி, மன அழுத்த நோயால் கடந்த சில மாதங்களாக பாதிக்கப்பட்டு வந்துள்ளார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு  அவரது தாய், விடுதியில் தங்கியிருந்து மருந்து, மாத்திரைகள் கொடுத்து கவனித்து வந்துள்ளார். பின்னர் தாய் ஊருக்கு புறப்பட்ட சென்ற சில நாட்களில் காயத்ரி, மனமுடைந்து தற்ெகாலை செய்து கொண்டது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது.

Related Stories: