நாங்கள் நெருக்கமாக இருந்தால் டேட்டிங்கா?: நடிகருடனான உறவு குறித்து நடிகை பதில்

மும்பை: ஒருவருடன் நாம் நெருக்கமாக இருந்தால் அது டேட்டிங்கா? என்று நடிகை ஷெஹ்னாஸ் கில் கேள்வி எழுப்பி உள்ளார். பாலிவுட் நடிகை ஷெஹ்னாஸ் கில் - நடன இயக்குனரும், நடிகருமான ராகவ் ஜூயல் ஆகிய இருவரும் நெருக்கமாக இருப்பதாகவும், ‘டேட்டிங்’ செய்து வருவதாகவும் சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில் மும்பையில் ஷெஹ்னாஸ் கில்லின் சகோதரர் ஷெஹ்பாஸ் படேஷாவின் பாடல் வெளியீட்டு விழா நடந்தது. அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ஷெஹ்னாஸ் கில்லிடம்,  ராகவ் ஜூயலுடனான உறவு குறித்து செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு அவர், ‘யாரேனும் ஒருவருடன் சென்றாலோ அல்லது ஒன்றாக இருந்தாலோ அல்லது சாதாரணமாக உல்லாசமாக வெளியே சென்றாலோ, அவர்கள் நெருக்கமான உறவில் இருக்கிறார்கள் என்று அர்த்தம் இல்லை. ஊடகங்கள் ஏன் எப்போதும் பொய் சொல்கிறது? மற்ற கேள்விகளுக்கு பின்னர் பதில் அளிக்கிறேன்’ என்று கூறிவிட்டு கிளம்பினார்.

Related Stories: