ஆந்திராவில் இருந்து பஸ்சில் கடத்தி வந்த 61 கிலோ கஞ்சா பறிமுதல்: வாலிபர் கைது; 5 பேரிடம் விசாரணை

திருத்தணி: ஆந்திராவில் இருந்து பஸ்சில் கடத்தி வந்த 61 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக வாலிபர் கைது செய்யப்பட்டார். 5 பேரிடம் விசாரணை நடந்து வருகிறது. திருத்தணி அடுத்த பொன்பாடி சோதனை சாவடியில் நேற்றிரவு வழக்கம் போல போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, ஆந்திராவில் இருந்து பஸ்சில் கஞ்சா கடத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ஆந்திராவில் இருந்து வரும் பஸ்களில் போலீசார், தீவிர சோதனை நடத்தினர். அப்போது, ஒருவர் ஒரு பிளாஸ்டிக் கவர் வைத்திருந்தார். சந்தேகத்தின் பேரில் அந்த பையை வாங்கி சோதனை செய்தபோது, அதற்குள் 5 கிலோ கஞ்சா இருந்தது தெரிந்தது. மேலும் 5 பேர் வைத்திருந்த பையை சோதனை செய்தனர். அதற்குள் 55 கிலோ கஞ்சா இருந்தது தெரிந்தது.

இதைடுத்து 6 பேரையும் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர். அவர்களில் ஒருவர் கூடுவாஞ்சேரி அடுத்த மகாலட்சுமி நகரை சேர்ந்த பரசுராமன் (23) என்பது தெரிந்தது. அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர். மற்றவர்கள் குறித்து தீவிர விசாரணை நடக்கிறது.

* திருத்தணி அடுத்த முருகம்பட்டு கிராமத்தில் உள்ள மாணிக்கம் (65) என்பவருக்கு சொந்தமான பங்க் கடையில் சோதனை நடத்தப்பட்டது. அங்கு 5 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து மாணிக்கத்தை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: