கும்மிடிப்பூண்டி காவல் சரகத்தில் கடை, வீடுகளை உடைத்து நகை, பணம் கொள்ளை

கும்மிடிப்பூண்டி: திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி காவல் சரகத்தில் ஆரம்பாக்கம், கும்மிடிப்பூண்டி, சிப்காட், கவரப்பேட்டை ஆகிய 4 காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். மேற்கண்ட பகுதிகளில் இரவு நேரங்களில் பூட்டியிருக்கும் வீடுகள், கடைகளை உடைத்து மர்ம கும்பல் கொள்ளையடிக்கும் சம்பவங்கள் வழக்கமாக நடைபெற்று வருகின்றன.இந்நிலையில், ஆரம்பாக்கம் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட நேற்று ஒரே நாளில் 4 கடைகள், சிப்காட் காவல்நிலைய பகுதிக்கு உட்பட்ட பால்பூத் உள்பட 4 கடைகள், ரெட்டம்பேடு சாலையில் ஒரு மளிகை கடை, கவரப்பேட்டை காவல்நிலைய பகுதியில் பேக்கரி மற்றும் பூட்டியிருந்த வீடுகளை உடைத்து மர்ம நபர்களை கைவரிசை காட்டியுள்ளனர். மேற்கண்ட பகுதிகளில் உள்ள கடைகள், வீடுகளை உடைத்து, அங்கிருந்து 15 சவரன் நகை மற்றும் ரூ.3 லட்சம் ரொக்கப் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

இக்கொள்ளை சம்பவங்களை மர்ம நபர்கள் 3 குழுக்களாக பிரிந்து, தனியார் வாகனத்தின் மூலம் ஈடுபட்டுள்ளனர் என போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து தகவலறிந்ததும் மாவட்ட எஸ்பி தலைமையில் 2 தனிப்படைகள் அமைத்து, மர்ம

நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும், சம்பந்தப்பட்ட பகுதி போலீசாரும் புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்து, மர்ம நபர்கள் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Related Stories: