×

டெல்லி துணை முதல்வர் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை; சிபிஐ நடத்தும் சோதனைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்போம்: முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லி: டெல்லி துணை முதலமைச்சர் வீட்டில் இன்று காலை முதல் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். டெல்லி, டெல்லியில் முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. டெல்லி துணை முதல்-மந்திரியாக மனிஷ் சிசோடியா செயல்பட்டு வருகிறார்.

மதுபான உரிமம் வழங்குவதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக பதியப்பட்ட வழக்கில் மனிஷ் சிசோடியாவின் வீடு உள்பட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தனது வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்துவது தொடர்பாக மனிஷ் சிசோடியா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவிட்டுள்ளார்.

த்விட்டேர் பதிவில்
லட்சக்கணக்கான குழந்தைகளுக்கு எதிர்காலத்தை உருவாக்கும் நாங்கள் நேர்மையானவர்கள். நல்ல செயல்கள் செய்பவர்களுக்கு இது போன்ற தொல்லைகள் கொடுக்கப்படுவது இந்த நாட்டில் துரதிர்ஷ்டவசமானது. இதனால் தான் நமது நாடு இன்னும் நம்பர் 1 நாடாக மாறவில்லை என்று கூறியுள்ளார்.

அரவிந்த் கெஜ்ரிவால்
டெல்லி துணை முதல்வர் உள்ளிட்டோர் வீடுகளில் சிபிஐ நடத்தும் சோதனைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்போம் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். கடந்த முறை சிபிஐ சோதனை நடத்தியபோது எதுவும் கிடைக்கவில்லை, இந்த முறையும் எதுவும் கிடைக்காது என அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.


Tags : Delhi ,Deputy ,Chief Minister ,CBI ,Arvind Kejriwal , Deputy Chief Minister of Delhi, CBI officials check, Chief Minister Arvind Kejriwal
× RELATED பாஜவில் இருந்து ஈஸ்வரப்பா திடீர் நீக்கம்