பில்கிஸ் பானு வழக்கில் விடுதலையான 11 குற்றவாளிகளுக்கு மாலை, மரியாதை விஎச்பி.யால் வெடித்தது சர்ச்சை

அகமதாபாத்: குஜராத்தில் கடந்த 2002ம் ஆண்டு நடந்த கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்துக்கு பிறகு, ரன்திக்பூர் கிராமத்தில் நடந்த கலவரத்தின்போது 5 மாத கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பானு என்ற பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். அவரது குழந்தை உட்பட குடும்பத்தை சேர்ந்த 7 பேர் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருந்த 11 குற்றவாளிகளையும், கடந்த 15ம் தேதி சுதந்திர தினத்தன்று குஜராத் அரசு பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்தது. கடந்த திங்களன்று இவர்கள் அனைவரும் சிறையில் இருந்து வெளியே வந்தனர். இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

இந்த விவகாரம் பிரதமர் மோடிக்கு தெரியாமல் நடந்ததா? என்று கேள்வி எழுப்பியுள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இது மிகப்பெரிய அவமானம் என்று மோடியை கண்டித்துள்ளார். இந்நிலையில், விடுதலை செய்யப்பட்ட 11 குற்றவாளிகளுக்கும் விஷ்வ இந்து பரிசத் அலுவலகத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டு, மாலை அணிவிக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டு உள்ளனர். இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த செயலுக்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது.

Related Stories: