கடனை திருப்பி கேட்ட பள்ளி ஆசிரியை தீ வைத்து எரிப்பு

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் அருகே உள்ள ராய்சார் கிராமத்தை சேர்ந்தவர் அனிதா (32). இவர் அதே ஊரை சேர்ந்த நபருக்கு ரூ.2.5 லட்சம் கடன் கொடுத்துள்ளார். இதை திரும்ப கேட்டதாக தெரிகின்றது. இது தொடர்பாக இருதரப்புக்கும் ஏற்கனவே தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த 10ம் தேதி தனது 6 வயது மகனுடன் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தபோது அனிதாவை அந்த கும்பல் வழிமறித்துள்ளது. அச்சமடைந்த அனிதா அங்கிருந்த ஒரு வீட்டிற்குள் சென்று, போலீசுக்கு  அவசர எண்ணில் தகவல் தெரிவித்துள்ளார். ஆனால், போலீசார் வரவில்லை.

அனிதாவை வெளியே இழுத்து வந்த அந்த கும்பல், அவர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளது. உடல் முழுவதும் தீப்பற்றிய நிலையில் அனிதா கதறி துடித்தபோது, அப்பகுதியில் இருந்தவர்கள் அவரை காப்பாற்ற முயற்சிக்காமல் செல்போனில் வீடியோ எடுப்பதில் மும்முரமாக இருந்துள்ளனர். சம்பவம் பற்றி கேள்விப்பட்டு அனிதாவின் கணவர் ஓடி வந்து, மனைவியை காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்தார். ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அனிதா தீப்பற்றி எரியும் வீடியோ சமூகவலைளத்தில் வைரலாகி வருகின்றது.

Related Stories: