ஒன்றிய அமைச்சரை பதவி நீக்கக் கோரி லக்கிம்பூரில் விவசாயிகள்; 3 நாட்கள் போராட்டம்

லக்கிம்பூர்: லக்கிம்பூர் படுகொலை செய்யப்பட்ட விவசாயிகளுக்கு நீதி கேட்டு விவசாயிகள் 75 மணி நேர தர்ணா போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.

உத்தரப் பிரதேச மாநிலம், லக்கிம்பூரில் வேளாண் சட்டத்துக்கு எதிராக விவசாயிகள் நடத்தி போராட்டத்தில் ஒன்றிய அமைச்சர் அஜய் குமார் மிஸ்ராவின் மகன் ஆசிஸ் மிஸ்ரா, தனது காரை விட்டு மோதியதில் 4 விவசாயிகள் கொல்லப்பட்டனர்.

இந்த வழக்கில் ஆசிஸ் மிஸ்ரா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். விவசாயிகள் படுகொலை, வன்முறைக்கு பொறுப்பெற்று ஒன்றிய அமைச்சர் அஜய் குமார் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்யும்படி ஒன்றிய அரசை விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், ஒன்றிய அரசு அதை கண்டுகொள்ளவில்லை.

இந்நிலையில், அஜய் குமார் மிஸ்ராவை பதவி நீக்க செய்ய வேண்டும், கொல்லப்பட்ட விவசாயிகளுக்கு நீதி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சம்யுக்தா கிசான் மோர்ச்சா சங்கம் சார்பில் லக்கிம்பூரில் 75 மணி நேரம் தொடர் தர்ணா போராட்டம் நேற்று தொடங்கியது. இதனால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories: