நேதாஜி அஸ்திக்கு மரபணு சோதனை; ஒன்றிய அரசிடம் மகள் முறையீடு

கொல்கத்தா: நேதாஜி சுபாஸ் சந்திர போஸின் மரணம் குறித்து பல தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. கடந்த 1945 ம் ஆண்டு ஆகஸ்ட் 18ம் தேதி தைவானில் நடந்த விமான விபத்தில் நேதாஜி இறந்தார் என்று நம்பப்பட்டாலும், அவரது மரணம் இன்று வரை மர்மமாகவே உள்ளது. இந்நிலையில், அவரது ஒரே மகளான அனிதா போஸ் நேற்று அளித்த பேட்டியில், ‘நேதாஜியின் மரணம் குறித்த மர்மங்களுக்கு தீர்வு காண்பதுதான், அந்த  மாபெரும் புரட்சியாளனுக்கு  நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருக்கும்.

நேதாஜியின் மகளான நான் என்னுடைய காலத்திலேயே இந்த பிரச்னைக்கு முடிவு காண விரும்புகிறேன். அவருடைய அஸ்தியை வழங்க ரென்கோஜி கோயில் நிர்வாகமும், ஜப்பானிய அரசும் ஒப்புக் கொண்டுள்ளன. நேதாஜியின் அஸ்தியை மரபணு சோதனைக்கு உட்படுத்துவது தொடர்பாக  ஒன்றிய அரசை விரைவில் அணுகுவேன். அப்போது தான், என் தந்தையின் மரணம் குறித்து இன்னும் சந்தேகம் உள்ளவர்களுக்கு, உண்மையான விபரம் தெரிய வரும்,’ என தெரிவித்தார்.

Related Stories: