மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் பரந்தூர் விமான நிலைய திட்டத்தை பரிசீலிக்க வேண்டும்; எஸ்.டி.பி.ஐ. வலியுறுத்தல்

சென்னை: எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்ட அறிக்கை: எஸ்.டி.பி.ஐ. கட்சியை பொறுத்தவரை அரசின் வளர்ச்சி திட்டங்கள், உட்கட்டமைப்பு திட்டங்கள் என்பது சுற்றுச்சூழலுக்கோ அல்லது மக்களின் வாழ்வாதாரத்திற்கோ அழிவை ஏற்படுத்தும் வகையில் இல்லாத திட்டமாக இருக்க வேண்டும் என்பதே.

ஆகவே, தமிழக அரசு கிராம மக்களின் உணர்வுகளை மதித்து, கண்துடைப்பு கருத்துகேட்பு கூட்டங்களை நடத்தாமல்,  திட்டத்திற்குட்பட்ட 12 கிராமங்களிலும் மக்கள் கருத்துகேட்பு கூட்டம் நடத்தி, மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் திட்டத்தை கைவிடுவது அல்லது மாற்று திட்டம் மூலம் திட்டத்தை மேற்கொள்வது குறித்து தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும்.

Related Stories: