மொரப்பூர் ரயில்வே ஸ்டேஷனில் ஓடும் ரயிலிலிருந்து இறங்கிய சென்னை போலீஸ்காரர் பலி

சேலம்: தர்மபுரி மாவட்டம், அரூர் ஈட்டியம்பட்டி கிராமத்ைத சேர்ந்தவர் வேலு (34), சென்னை ஆர்.கே.நகர் போலீஸ் ஸ்டேஷனில் சட்டம் ஒழுங்கு பிரிவில் முதல்நிலை காவலராக இருந்தார். மனைவி பார்வதி மற்றும் 3 மகன்களுடன் கொண்டிதோப்பு காவலர் குடியிருப்பில் வசித்தார். கடந்த 20 நாட்களுக்கு முன் போலீஸ்காரர் வேலு மஞ்சள் காமாலை பாதிப்பு ஏற்பட்டு, மருத்துவ விடுப்பில் சொந்த ஊரான அரூர் வந்துள்ளார். வேலூர் மாவட்டம் வாலாஜாவில் சிகிச்சைக்கு சென்ற அவர் நேற்று காலை, அங்கிருந்து மொரப்பூருக்கு கோவை எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறி வந்தார்.

காலை 10.10 மணிக்கு மொரப்பூர் ரயில்வே ஸ்டேஷனுக்கு ரயில் வந்ததும், ஓடும் ரயிலில் இருந்து வேகமாக இறங்கியுள்ளார். கால் தவறி ரயிலுக்கும், நடைமேடைக்கும் இடையில் விழுந்துவிட்டார். அதில், ரயில் சக்கரம் ஏறியதில் உடல் இரு துண்டாகி சம்பவ இடத்திலேயே போலீஸ்காரர் வேலு பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடல் சொந்த ஊரில் போலீஸ் மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. இறந்த வேலுவிற்கு மனைவி மற்றும் 7, 6, 2 வயதில் 3 மகன்கள் உள்ளனர்.

Related Stories: