பள்ளி மைதானத்தில் மின்னல் தாக்கி மாணவன் பலி

பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே தாளையடிகோட்டை கிராமத்தைச் சேர்ந்த கதிர்வேலு மகன் கஜினி (16). நயினார்கோவில் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். நேற்று மதியம் 3 மணி அளவில் இடி, மின்னலுடன் மழை பெய்தது. அப்போது விளையாடும் நேரம் என்பதால் பள்ளி வளாகத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த கஜினியை மின்னல் தாக்கியது. இதில் உடல் கருகிய நிலையில் சம்பவ இடத்திலேயே கஜினி பலியானார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: