இ-சேவை மையங்கள் மூலம் தமிழ் வழியில் படித்ததற்கான சான்று மாணவர்களுக்கு விநியோகம்; பள்ளிக்கல்வி ஆணையர் உத்தரவு

வேலூர்: பள்ளிக்கல்வி ஆணையர் நந்தகுமார், அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: இ-சேவை மையங்கள் மூலம் பிஎஸ்டிஎம் எனப்படும் தமிழ் வழியில் படித்ததற்கான சான்றிதழ் பெற விண்ணப்பிக்கும் சேவையை பள்ளிக் கல்வித்துறை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி இச்சான்றிதழ் தேவைப்படுவோர் இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்க வேண்டும். இந்த விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்படும்.

அவை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பி வைக்கப்படும். இதையடுத்து பள்ளியில் பராமரிக்கப்படும் பதிவேடுகளின் அடிப்படையில் விண்ணப்பதாரரின் விவரங்களின் நம்பகத்தன்மையை தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் சரிபார்க்க வேண்டும். தகவல் சரியானது என உறுதிப்படுத்தப்பட்டால், அவர்களுக்கு அரசாணை (நிலை) எண்.82, மனிதவள மேலாண்மை (எஸ்) துறையின்படி பிஎஸ்டிஎம் சான்றிதழுக்காக வழங்கப்பட்டுள்ள பதிவேட்டில் பதிவு செய்து சான்று வழங்கலாம். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Related Stories: