உயர்நீதிமன்ற தீர்ப்பின் மூலம் அரசியல் அனாதையானார்; எடப்பாடி நாஞ்சில் சம்பத் கருத்து

கடலூர்: உயர்நீதிமன்ற தீர்ப்பின் மூலம் அரசியல் அனாதையாகி உள்ளார் எடப்பாடி பழனிசாமி என நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார். கடலூரில் நேற்று நாஞ்சில் சம்பத் அளித்த பேட்டி: அதிமுக தலைவராக நாடகமாடிய எடப்பாடி பழனிசாமிக்கு உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, ஒரு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. தன்னை முதலமைச்சராக்கிய சசிகலா தலையிலே கை வைத்து, அவரை கட்சியிலிருந்து நீக்கியவர்தான் இந்த எடப்பாடி.

இவர் எந்த காலத்திலும் தமிழ்நாட்டு அரசியலில் வெற்றி பெற முடியாது. கொள்ளையடித்த பணத்தை வைத்து பொதுக்குழு உறுப்பினர்கள் மூலம் அரங்கேற்றிய நாடகம் முடிவு பெற்றுள்ளது. எடப்பாடி பழனிசாமி தமிழ்நாட்டு அரசியலில் அனாதையாகி உள்ளார். அவருக்கு கட்சியை தலைமை தாங்குவதற்கு எந்த தகுதியும் இல்லை, என்றார்.

Related Stories: