ஷியாம் சிங்க ராய் ஆஸ்கருக்கு பரிந்துரை

புதுடெல்லி: மூன்று பிரிவுகளில் ஷியாம் சிங்க ராய் படத்தை ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆஸ்கர் விருதுக்கு குறிப்பிட்ட சில இந்திய படங்களை தேர்வு செய்ய தனிக்குழு உள்ளது. இந்த குழு, தெலுங்கில் வெளியான ஷியாம் சிங்க ராய் படத்தை தேர்வு செய்துள்ளது. இந்த படத்தில் நானி, சாய் பல்லவி, கிரித்தி ஷெட்டி நடித்திருந்தனர். தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் மொழிகளிலும் இந்த படம் வெளியானது. தியேட்டர்களில் நல்ல வசூலை கொடுத்த இந்த படம், ஓடிடியிலும் ரசிகர்களை கவர்ந்தது.

ஓடிடியில் அதிக பார்வையாளர்களை பெற்ற படம் என்ற வகையில் முதலிடம் பிடித்தது. இந்நிலையில் இந்த படத்தை பீரியாடிக் படம், பின்னணி இசை மற்றும் கிளாசிக்கல் கலாச்சார நடன படம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் ஆஸ்கார் விருது பட்டியலுக்கு அனுப்ப தேர்வு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து படத்தின் இயக்குனர் ராகுல் சங்கிரித்யன் கூறும்போது, ‘ரசிகர்கள் மத்தியில் இந்த படம் ஏற்படுத்திய தாக்கமே எனக்கு பெரிய விருதாக இருந்தது. ஆனாலும் இப்போது ஆஸ்கருக்கும் அனுப்புவது சந்தோஷம்தான். விருது கிடைக்காவிட்டாலும் மக்களின் அங்கீகாரம் கிடைத்ததே பெரிய விஷயமாக பார்க்கிறேன்’என்றார்.

Related Stories: