பணத்தை சேமிக்க 4 டிப்ஸ்

1. பட்ஜெட்: ஒவ்வொரு மாதமும் வரவு செலவுகளை கண்டறிந்து பட்ஜெட் தயார் செய்ய வேண்டும். பட்ஜெட் போட்டு பழகும்போதுதான் பணம் தேவையில்லாமல் எங்கு கசிகிறது?அதை எப்படி தடுக்கலாம்? என தெரிந்துகொள்ள முடியும். தற்போது ஈசியாக பட்ஜெட் போட மொபைல் ஆப்கள் வந்துள்ளன. அதைகூட நாம் பயன்படுத்தலாம்.

2. தேவை: எது தேவையோ அதற்கு மட்டும் செலவிட்டு, தேவையில்லாத செலவுகளை தவிர்க்க வேண்டும். மற்றவர்களிடம் ஒரு பொருள் இருக்கிறது என்பதை மட்டும் நாம் பார்த்து அதை வாங்க நினைக்கக்கூடாது. அந்த பொருள் நிஜமாகவே நமக்கு தேவைப்படுகிறதா? அதனால் பயன் கிடைக்குமா? என்பதை நன்கு சிந்தித்து அதனை வாங்குவதற்கு செலவு செய்ய வேண்டும்.

3. எமோஷன்: பணத்தை செலவு செய்யும்போது எமோஷன்களை தவிர்க்கவேண்டும். அதிக மகிழ்ச்சி, பேராசை, பதற்றம், கவலை போன்ற எமோஷனலான சூழல்களில் செலவு செய்வதை தவிர்க்க வேண்டும். அப்படி செய்யும்போது வீண் செலவுகளை தவிர்த்த சேமிக்க முடியும்.

4. முதலில் சேமிப்பு: பெரும்பாலானவர்கள் ஒவ்வொரு மாதமும் செலவு செய்த பணத்தில் மீதமுள்ளதை சேமிக்கின்றனர். அது தவறானது. ஒவ்வொரு மாதமும் வருமானம் வந்தவுடன் அதில் ஒரு தொகையை எடுத்து முதலில் சேமித்துவிட்டு, மீதமுள்ள பணத்தை செலவு செய்ய வேண்டும். அதுவே சிறந்தது என்பது நிபுணர்களின் அறிவுரை.

சேமிப்பு பொன்மொழிகள்

* இளமையில் உன் சேமிப்பு மட்டுமே முதுமையில் உனக்கு கை கொடுக்கும்.

* நேரத்தையும் பணத்தையும் வீணாக்காதீர்கள். இரண்டையும் சிறப்பாக பயன்படுத்துங்கள்.

* சேமிப்பு செழித்து வளர சிறந்த வழி சிக்கனம்.

* செலவழித்த பின் எஞ்சியதை சேமிக்க வேண்டாம். சேமித்த பின் எஞ்சியதை செலவிடுங்கள்.

* ஒவ்வொரு முறையும் நீங்கள் கடன் வாங்கும்போது எதிர்கால சுயத்தை கொள்ளையடிக்கிறீர்கள்.

* சிறிய செலவுகளில் கவனம் கொள்ளுங்கள். ஒரு சிறிய கசிவு மிகப்பெரிய கப்பலை மூழ்கடிக்கும்.

* வீண் செலவுகளை தவிர்த்து சேமியுங்கள். அது உங்களை காப்பாற்றும்.

* பணக்காரன் ஆக வேண்டுமா? பணத்தைக் குவிக்க வேண்டாம். தேவைகளை குறைக்க வேண்டும்.

* ஆடம்பர செலவு என்பது தரித்திரத்தை விலை கொடுத்து வாங்குவதாகும்.

* சம்பாதிப்பவனைவிட சேமிப்பவனே சிறந்தவன்.

* சேமிப்பை உதாசீனம் செய்பவன் தன் வாழ்வில் ஒருநாளும் செழுமை கொண்டுவர முடியாது.

* சிக்கனமாக வாழும் ஏழை சீக்கிரம் செல்வந்தன்.

* வரவுக்கு மீறிய செலவு செய்யாததே நல்ல குடும்பம்

* சிக்கனமே செல்வம். தகுதிக்கு மேல் வாழ்வது தரித்திரம்.

* சிக்கனமும், சேமிப்பும் செல்வம் பெருக உதவும்.

* சேர்த்து வைத்த புண்ணியம் மறுமையிலும் துணை நிற்கும். சேமித்து வைத்த பணம் வறுமையில் பயன் அளிக்கும்.

Related Stories: