இந்தியாவில் தான் இந்த கொடுமை, ஆண்களுக்கு இணையாக பெண்களும் கள்ளக்காதல்; கருத்து கணிப்பில் பகிரங்கம்

புதுடெல்லி: இந்தியாவில் ஆண்களுக்கு இணையாக பெண்களும் அதிக பாலியல் நண்பர்களை கொண்டிருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.  

இந்தியாவில் சமீப காலமாக, அதிகளவில் பாலியல் நண்பர்களை கொண்டவர்கள் இடையே எய்ட்ஸ் நோய் பரவி வருகிறது. இது தொடர்பாக  ஒன்றிய தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு துறை மூலம் நாடு முழுவதும் ஆய்வு நடத்தப்பட்டது. இதில், ஆண்களுக்கு இணையாக பெண்களும் அதிக பாலியல் நண்பர்களை (கள்ளக்காதலர்கள்)  பெற்றுள்ளனர் என தெரியவந்துள்ளது. நாடு முழுவதும் 1.1 லட்சம் பெண்கள், ஒரு லட்சம் ஆண்களிடம் அவர்களின் குடும்ப வாழ்க்கைக்கு அப்பாற்பட்ட பாலியல் நண்பர்களின் எண்ணிக்கை குறித்து கருத்து கேட்கப்பட்டது. இதில், நகர்புற பெண்கள் தங்கள் வாழ்நாளில் சராசரியாக 1.5 சதவீதம் பாலியல் நண்பர்களை கொண்டுள்ளனர் என தெரிய வந்துள்ளது. ஆண்கள் 1.7 சதவீதம் பாலியல் நண்பர்களை பெற்றுள்ளனர்.

கிராமப்புறங்களில் இந்த சதவீதம் சற்று அதிகமாக உள்ளது. பெண்களுக்கு 1.8 சதவீதமும், ஆண்களுக்கு 2.3 சதவீதமும் பாலியல் நண்பர்கள் இருக்கின்றனர்.

பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் ஆண்களை விட பெண்களுக்குதான் அதிக எண்ணிக்கையில் கள்ளத்தனமான பாலியல் நண்பர்கள் இருக்கின்றனர். ராஜஸ்தான், அரியானா, சண்டிகர், ஜம்மு மற்றும் காஷ்மீர், லடாக், மத்தியப் பிரதேசம், அசாம், கேரளா, லட்சத்தீவு, புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில், ஆண்களை விட பெண்களுக்கு அதிகளவில் பாலியல் நண்பர்கள் உள்ளனர். கள்ளக்காதலில் ராஜஸ்தான் முதலிடத்தில் உள்ளது. இங்கு பெண்களுக்கான பாலியல் நண்பர்கள் சராசரியாக 3.1 சதவீதமும், ஆண்களுக்கு வெறும் 1.8 சதவீதமும் உள்ளனர். ஆனால், இந்த கணக்கெடுப்புக்கு முந்தைய 12 மாதங்களில் தங்கள் வாழ்க்கை துணை அல்லாத மற்ற பெண்களுடன் பாலியல் உறவு வைத்துக் கொண்ட ஆண்களின் சதவீதம், பெண்களை விட 0.5 சதவீதம் அதிகமாக உள்ளது.

Related Stories: