திருத்தணி அரக்கோணம் சாலையில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி தீவிரம்

திருத்தணி: திருத்தணி அரக்கோணம் சாலையில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடந்தது வருகிறது. நாடுமுழுவதும் இந்துக்களால் கொண்டாடப்படும் திருவிழாக்களில் மிகவும் பிரசித்தி பெற்றது விநாயகர் சதுர்த்தி விழா.  இந்துக்களால், ஒவ்வொரு பகுதியிலும் ஏராளமான வண்ணங்களில் விநாயகர் சிலைகள் வாங்கி பொதுஇடத்தில் வைத்தும் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் வருகின்ற 31ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழாவின்போது, சிலைகள் வைத்து சிறப்பு பூஜைகள் செய்வது வழக்கம்.

இதனை தொடர்ந்து, விநாயகர் சிலைகள் 3 முதல் 9 நாட்கள் வரை பொது இடத்தில் பூஜை செய்யப்பட்ட பிறகு,  ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு ஆறு, ஏரி, கடல் குளம் மற்றும் நீர் நிலைகளில் கரைத்து விடுவார்கள். தற்போது, இந்த விழாவையொட்டி திருத்தணி அரக்கோணம் சாலையில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. விநாயகர் சிலைக்கு பெண் ஒருவர் பெயிண்ட் அடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். தற்போது, விநாயகர் சிலைகள் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை பல்வேறு வண்ணங்களிலும் பல்வேறு மாடல்களிலும் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து  வருகிறது.

Related Stories: