சரமாரியா குத்தினேன் எப்படிங்க பிழைச்சாரு! ருஷ்டியை தாக்கிய இளைஞன் ஆச்சர்யம்

வாஷிங்டன்: கத்தியால் சரமாரியாக குத்தியும் சல்மான் ருஷ்டி பிழைத்துள்ளது ஆச்சரியம் தருவதாக தாக்குதல் நடத்திய இளைஞர் தெரிவித்துள்ளா்ன்.

அமெரிக்காவின் நியூயார்க்கில் கடந்த வாரம் நடந்த நிகழ்ச்சியில், சர்ச்சைக்குரிய பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டியை வாலிபர் ஒருவர், கத்தியால் கழுத்திலும், வயிற்றிலும் சரமாரியாககுத்தினான். ஒரு கண்பார்வை பறிபோன நிலையில் தற்போது அவர் சிகிச்சை பெற்று வருகின்றார். அவர் உடல்நிலை முன்னேற்றம் அடைந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். சல்மானை கத்தியால் குத்திய ஹதி மாதர் என்ற அந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். அவர் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சிறையில் இருந்தபடி வீடியோ மூலமான நேர்காணலில் பேசிய ஹதி மாதர்,‘‘அந்த எழுத்தாளர்உயிர் பிழைத்து விட்டார் என்பதை கேட்டு நான் ஆச்சரியமடைந்தேன். அவரை எனக்கு பிடிக்கவில்லை. அவர் நல்ல மனிதர் என்று நான் நினைக்கவில்லை. அவர் இஸ்லாமை தாக்கிய நபர். நம்பிக்கை மற்றும் நம்பிக்கை அமைப்புக்களை தாக்கியுள்ளார். அவர் எழுதிய சாத்தானின் வேதங்கள் புத்தகத்தில் இரண்டு பக்கங்களை மட்டுமே நான் படித்தேன். அவரது யூடியூப் வீடியோக்களை பார்த்துள்ளேன். அவர் மிகவும் மோசமான நபர்” என்று தெரிவித்துள்ளான்.

Related Stories: