சீனாவில் திடீர் மழை, வெள்ளம் 16 பேர் பலி

பிஜீங்: சீனாவில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு16 பேர் பலியாகி உள்ளனர். சீனாவின் வடமேற்கு கிங்காய் மாகாணத்தில் நேற்று திடீரென கனமழை பெய்து, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. டத்தோங் ஹுய், டு ஆகிய தன்னாட்சி அதிகாரம் பெற்ற மாவட்டங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் பலர் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டனர். பேரிடர் மீட்பு குழுவினர் மீட்பு பணிகளை முடுக்கி விட்டனர்.

இதில், 16 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். 36 பேர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். அவர்களை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும், அப்பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டு உள்ளனர். வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

Related Stories: