மீண்டும் போர் பதற்றம் தைவானை சுற்றி நிற்கும் சீன நீர்மூழ்கிக் கப்பல்கள்; பதிலடிக்கு தயார்நிலை

பீஜிங்: தைவானை சீன கடற்படை நீர்மூழ்கி கப்பல்கள் சுற்றி வளைத்து நிற்பதால், மீண்டும் போர்  பதற்றம் ஏற்பட்டுள்ளது. சீனாவின் கடும் எதிர்ப்பையும் மீறி, அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி  சமீபத்தில் தைவானுக்கு சென்றார். இதைத் தொடர்ந்து, தைவானை சுற்றி சீன ராணுவத்தின் முப்படைகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டன. இதனால், போர் மூளும் அபாயம் ஏற்பட்டது. பின்னர், சில நாட்களில் இந்த போர் பயிற்சியை சீனா நிறுத்தியது. இந்நிலையில், சில தினங்களுக்கு அமெரிக்க எம்பி.க்கள் குழுவும் தைவான் சென்றது. இதையடுத்து, தைவானை சுற்றி மீண்டும் சீன ராணுவம் போர் பயிற்சியில் ஈடுபட தொடங்கி இருக்கிறது.

தைவானை சுற்றி சீன கடற்படையின் நீர்மூழ்கி கப்பல்கள் நிற்கின்றன. அதன் போர் விமானங்கள் தைவான் வான் எல்லைக்குள் அத்துமீறி பறக்கின்றன. இதற்கு போட்டியாக, தைவானின் அதிநவீன போர் விமானங்களும், ராணுவமும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளன. இதனால், இப்பகுதியில் மீண்டும் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. தைவான் பாதுகாப்பு அமைச்சகம் நேற்று வெளியிட்ட டிவிட்டர் பதிவில், ‘சீன ராணுவத்தின் 5 போர்க்கப்பல்கள், 17 போர் விமானங்கள் தைவான் எல்லையில் காணப்பட்டன,’என கூறியுள்ளது.

Related Stories: