மக்கள் தொடர்பு திட்ட முகாம் 217 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: எம்.எல்.ஏ வழங்கினார்

திருத்தணி: ஆர்.கே.பேட்டை அருகே நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 217 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை எஸ்.சந்திரன் எம்.எல்.ஏ வழங்கினார். திருவள்ளூர் மாவட்டம்  ஆர்.கே.பேட்டை அருகே  வீரமங்கலம் கிராமத்தில்  மக்கள் தொடர்பு திட்ட முகாம்  திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் ஜெ. ஹஸ்ரத்பேகம் தலைமையில் நடைபெற்றது. ஆர்.கே.பேட்டை வட்டாட்சியர் சரவணன் வரவேற்றார்.

இந்நிகழ்ச்சியில் திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் எஸ். சந்திரன் பங்கேற்று 217 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா, முதலமைச்சர் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் கல்வி மற்றும் திருமண உதவித் தொகை, உட்பிரிவு பட்டா மாறுதல், புதிய மின்னணு குடும்ப அட்டை, முதியோர் உதவித் தொகை, விதவை உதவித்தொகை, மாற்று திறலாளி உதவித்தொகை, இயற்கை மரணம் ஈமச்சடங் உதவித் தொகை உள்ளிட்ட சான்றிதழ்கள் மற்றும் தமிழக அரசின் நிதி உதவி வழங்கினார்.

ஆர்.கே.பேட்டை ஒன்றிய குழு துணைத் தலைவர் திலகவதி ரமேஷ், ஒன்றிய திமுக செயலாளர்கள் சி.என்.சண்முகம், பி.பழனி, மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் மா.ரகு, ஒன்றிய நிர்வாகிகள் மாவட்ட பிரதிநிதி எஸ். ஆர்.செங்குட்டுவன், பெருமாள், கணேசன், ஜெயசங்கர், நாராயணன், சுகுணா மூர்த்தி, திருவேங்கடம், சங்கரன்,  மாவட்ட நெசவாளரணி துணை அமைப்பாளர் சி.எம்.இரவி உட்பட வருவாய்த்துறை அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

Related Stories: