உரிமையாளரின் உரிமையை பாதுகாக்காமல் டாஸ்மாக் பார் டெண்டரை இறுதி செய்யக்கூடாது: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: உரிமையாளரின் உரிமையை பாதுகாக்கமல், டாஸ்மாக் பார் டெண்டரில் இறுதி முடிவு எடுக்கக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாஸ்மாக் மதுபான கடை அருகில் திண்படங்களை விற்பனை செய்வது மற்றும் காலி பாட்டில்களை சேகரிப்பதற்கான பார்களை நடத்துவதற்கான  உரிமங்களுக்கான டெண்டருக்கு விண்ணப்பங்களை வரவேற்று டாஸ்மாக் நிர்வாகம் ஆகஸ்ட் 2ம் தேதி அறிவிப்பாணை வெளியிட்டது. தற்போது பார் உரிமம் பெற்றவர்கள் பார் நடத்தும்  இடத்தை டெண்டரில் வெற்றி பெற்றவருக்கு வழங்க வேண்டும் என்று டாஸ்மாக் நிறுவனம் வற்புறுத்துவதாகக் கூறி ஆகஸ்ட் 2ம் தேதி அறிவிப்பாணைக்கு தடை கோரி திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த பார் உரிமதாரர்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், டெண்டர் நடைமுறையை தொடரலாம் என்றும், டெண்டர் வழங்க கூடாது என்று உத்தரவிட்டுள்ளார். மேலும் மனுவுக்கு ஆகஸ்ட் 26ம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி, விசாரணை ஆகஸ்ட் 30ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Related Stories: