கோயில் பூசாரிகளின் எண்ணிக்கையை 10 ஆயிரமாக உயர்த்தி நிதி ஒதுக்க வேண்டும்

சென்னை: கிராம கோயில் பூசாரிகள் ஓய்வூதிய தேர்வுக்குழு கூட்டம் சென்னையில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை தலைமை அலுவலகத்தில் ஆணையர்  தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில் ஓய்வூதிய தேர்வுக்குழு உறுப்பினரும் கோயில் பூசாரிகள் நலச்சங்க  மாநில தலைவருமான வாசு பூசாரி முன்னிலையில் வகித்தார். அப்போது தமிழகம் முழுவதிலும் இருந்து ஓய்வூதியம் கோரி வந்த விண்ணப்பங்களில் 33 பேர் ஓய்வூதியம் பெற தேர்வு செய்யப்பட்டனர். இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இல்லாத 60 வயதிற்கும் மேற்பட்ட  கிராமப்புற கோயில்களில் 4000 பூசாரிகளுக்கு மட்டுமே ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இனி பயனாளிகள் எண்ணிக்கையை 10 ஆயிரமாக உயர்த்த வேண்டும்.

Related Stories: