நள்ளிரவில் இடி மின்னலுடன் மழை சென்னை விமானநிலையத்தில் விமான சேவைகள் பாதிப்பு: மும்பை விமானம் பெங்களூரு திரும்பியது

சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் நேற்று அதிகாலை வரை இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் விமான சேவைகள் பெரிதும் பாதிக்கப்பட்டன. நேற்று முன்தினம் நள்ளிரவு மும்பையில் இருந்து 132 பயணிகளுடன் சென்னை வந்த விமானம், பெங்களூருக்கு திருப்பி விடப்பட்டது. இதேபோல், புவனேஸ்வரில் இருந்து நள்ளிரவு 117 பயணிகளுடன் வந்த விமானம், ஐதராபாத்தில் இருந்து 98 பயணிகளுடன் வந்த விமானம் ஆகிய இரண்டும் தரையிறங்க முடியாமல், நீண்ட நேரம் வானில் வட்டமடித்தன. இதன்பின் நேற்று அதிகாலை 1.30 மணியளவில் 2 விமானங்களும் தரையிறங்கின. மேலும், சென்னையில் இருந்து நள்ளிரவு வழக்கம் போல் புறப்படும் 2 கொழும்பு விமானங்கள், பாங்காக் செல்லும் ஒரு விமானம் போன்றவை 1 மணி நேரம் தாமதமாக சென்றன. அதிகாலை 3 மணியளவில் மழை ஓய்ந்ததும், சர்வதேச விமான நிலையத்தில் அனைத்து விமான சேவைகளும் வழக்கம் போல் இயங்க துவங்கின.

Related Stories: