ஓபிஎஸ்சுக்கு ஆதரவாக தீர்ப்பு எடப்பாடி பழனிசாமி விடியவிடிய ஆலோசனை: இரு தரப்பினர் திடீர் மோதலால் பரபரப்பு

சென்னை: ஓபிஎஸ்சுக்கு ஆதரவாக நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை தொடர்ந்து இபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் விடிய விடிய ஆலோசனை நடத்தினார். ஆலோசனையில் இரு தரப்பினருக்குள் மோதிக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. உயர்நீதிமன்ற தீர்ப்பு தொடர்பாக, தனது ஆதரவாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் ஆலோசனை நடத்தினார். அப்போது நிர்வாகிகள் பலர் ஓபிஎஸ்சுடன் இணங்கி போகலாம். அவரை கட்சியில் இணைத்து செயல்படுவோம். அடுத்த ஆண்டு பொதுக்குழு கூடும் போது நம்முடைய பலத்தை நிரூபித்து வெற்றி பெறுவோம்.

அதன் பிறகு ஓபிஎஸ்சை வெளியேற்றி விடலாம் என்று கூறினர். இன்னொரு தரப்பினர் உடனடியாக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும். ஓபிஎஸ்சை எக்காரணம் கொண்டும் கட்சியில் சேர்க்க கூடாது என்றும் வலியுறுத்தினர். இதனால், தீர்ப்பு வெளியானதும் தொடங்கிய கூட்டம் இரவு வரை நீடித்தது. இந்த ஆலோசனை கூட்டத்தில் எடப்பாடி தரப்பில் உள்ளவர்களுக்குள் ஒரு கட்டத்தில் மோதல் போக்கு உருவானது. அதே நேரத்தில் எடப்பாடிக்கு திடீர்  உடல் நலக்குறைவால் அவரால் ரொம்ப நேரம் பேச முடியவில்லை. கட்சிக்குள் இரு தரப்பினர் மோதலால் என்ன செய்வது என்று தெரியாமல் எடப்பாடி திணறியதாக கூறப்படுகிறது.

Related Stories: