இடைக்கால பொதுச்செயலாளர் பதவியை இழந்தார் எடப்பாடி: லெட்டர்பேடில் இருந்தும் நீக்கினார்

சென்னை: நீதிமன்ற தீர்ப்பை அடுத்து அதிமுக இடைச்செயலாளர் என்ற பதவியை எடப்பாடி இழந்தார். அதேபோல தனது லெட்டர் பேடில் இருந்தும் அந்த பதவியை நீக்கிவிட்டார். அதிமுக பொதுக்குழு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கியது. அதில், ‘அதிமுக பொதுக்குழு செல்லாது. எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்ததும் செல்லாது ‘என்று உத்தரவிட்டது.இதனால் அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவியே இருக்கும். இதனால் இடைக்கால பொதுச்செயலாளராக பதவியை எடப்பாடி தீர்ப்புக்கு பிறகு இழந்தார்.  மேலும், ஜூன் 11ம் தேதிக்கு பிறகு, எடப்பாடி பழனிசாமி தனது லெட்டர் பேடில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் மற்றும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர்’ என்று பதிவிட்டிருந்தார்.இந்நிலையில்  தீர்ப்புக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி தனது லெட்டர் பேடில் தனது பதவியை மாற்றம் செய்துள்ளார். நேற்று கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து தெரிவித்து வெளியிட்ட அறிக்கையில், ‘எடப்பாடி பழனிசாமி, சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், தமிழ்நாடு முன்னாள் முதல்வர்’ என்று மாற்றம் செய்து இருந்தார். 

Related Stories: