மாணவி ஸ்ரீமதி மரண வழக்கு பள்ளி தாளாளர் உள்பட 5 பேர் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி

விழுப்புரம்: கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூர் தனியார் மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்த மாணவி ஸ்ரீமதி, கடந்த மாதம் 13ம் தேதி மர்மமான முறையில் இறந்தார். இது தொடர்பாக பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், ஆசிரியைகள் ஹரிப்பிரியா, கீர்த்திகா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். சேலம் சிறையில் உள்ள 5 பேரும் ஜாமீன் கேட்டு விழுப்புரம் மகளிர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். இதனை நீதிபதி சாந்தி விசாரித்தபோது அரசுதரப்பு வழக்கிறஞர் ஜாமீன் வழங்கினால் சாட்சிகளை கலைக்கக்கூடும் என்று எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து பள்ளி தாளாளர் உள்ளிட்ட 5 பேரின் ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

Related Stories: