கருமுட்டை விற்பனை விவகாரத்தில் கைது சிறுமியின் தாய், தந்தை உள்பட 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

ஈரோடு: ஈரோட்டை சேர்ந்த 16 வயது சிறுமியின் கருமுட்டை விற்பனை தொடர்பாக கைது செய்யப்பட்ட சிறுமியின் பெற்றோர், ஏஜென்டாக செயல்பட்ட ஈரோடு கைகாட்டிவலசை சேர்ந்த மாலதி மற்றும் சிறுமியின் பெயரில் போலி ஆதார் கார்டு தயாரித்த வேன் டிரைவர் ஜான் (25) ஆகிய 4 பேரும் ஜாமீன் பெறுவதற்கு முயற்சிகளை மேற்கொண்டனர். இதையடுத்து அவர்களை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்ட நிர்வாகத்திற்கு கடந்த வாரம் பரிந்துரை செய்யப்பட்டது. அதை ஏற்று, சிறையில் உள்ள தாய், தந்தை, ஏஜென்ட் மாலதி, வேன் டிரைவர் ஜான் ஆகிய 4 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டர் கிருஷ்ணனுண்ணி உத்தரவிட்டார். இந்த உத்தரவு நகல் சிறையில் உள்ள 4 பேருக்கும் நேற்று வழங்கப்பட்டது.

Related Stories: