தமிழகம் முழுவதும் 1,500 புதிய அங்கன்வாடி மையங்கள் கட்ட நடவடிக்கை: அமைச்சர் கீதா ஜீவன் தகவல்

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் சமூக நலன் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் நேற்று அளித்த பேட்டி: நடப்பு நிதியாண்டில் தமிழகம் முழுவதும் ஆயிரம் புதிய அங்கன்வாடி மையங்கள் ஊரக வளர்ச்சி துறை சிறப்பு நிதி மூலம் கட்ட பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு நிதி மூலம் மேலும் 500 புதிய அங்கன்வாடி மையங்கள் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் சமூக நலத்துறை சீர்கெட்டுள்ளது. தவறான முறையில் குழந்தைகளை பயன்படுத்த உடந்தையாக இருந்த அலுவலர் 5 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதே காலக்கட்டத்தில் பாலியல் தொல்லை குற்றங்கள் தொடர்பாக போக்சோ வழக்கு பதிவு செய்யப்படவில்லை. தற்போது உடனுக்குடன் போக்சோ வழக்குக பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பணிபுரியும் இடங்களில் பாலியல் குற்றம் தடுக்க புகார் பெட்டி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

Related Stories: