மாமல்லபுரத்தில் விசிக சார்பில் அங்கன்வாடி குழந்தைகளுக்கு உணவு

மாமல்லபுரம்: விசிக தலைவர் திருமாவளவன் பிறந்த தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்கள், அங்கன்வாடி குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. விசிக தலைவர் திருமாவளவன் 60வது பிறந்த தினத்தை முன்னிட்டு மாமல்லபுரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 60 கிலோ இராட்சத கேக் வெட்டி சிறப்பாக கொண்டாடினர். நிகழ்ச்சிக்கு, மாமல்லபுரம் நகர செயலாளர் ஐயப்பன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் சிந்தனை சிவா, சாலமன், பிரகாஷ், கவாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து, மாமல்லபுரம் ஆதிதிராவிடர் நல உயர்நிலை பள்ளி மாணவர்கள் மற்றும் அங்கன்வாடி குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கினர்.

Related Stories: