கட்டண பாக்கி வைத்துள்ள 13 மாநிலங்கள் அவசர தேவைக்கு மின்சாரம் வாங்க தடை: பவர் சிஸ்டம் ஆபரேஷன் கார்ப்பரேஷன்

டெல்லி: மின்னுற்பத்தி நிறுவனங்களுக்கு கட்டண பாக்கி வைத்துள்ள 13 மாநிலங்கள் அவசர தேவைக்கு மின்சாரம் வாங்க தடை விதிக்கப்பட்டது. தமிழ்நாடு, ஆந்திரப்பிரதேசம், தெலுங்கானா, மணிப்பூர், கர்நாடகம், மராட்டியம் உள்ளிட்ட மாநிலங்களுக்கும் தடை பொருந்தும் என தகவல் வெளியாகியுள்ளது. 13 மாநிலங்களும் கூட்டாக மின்னுற்பத்தி நிறுவனங்களுக்கு ரூ.5,000 கோடி பாக்கி வைத்துள்ளதால் நடவடிக்கை என விளக்கம் அளிக்கப்பட்டது. மின்கட்டமைப்பை நிர்வகிக்கும் பவர் சிஸ்டம் ஆபரேஷன் கார்ப்பரேஷன் முதல்முறையாக 13 மாநிலத்துக்கு எதிராக தெரிவித்துள்ளது.

Related Stories: