சமத்துவபுர வீடுகளை பழுது பார்ப்பதில் மெத்தனம்: ஒதுக்கப்பட்ட நிதி சரியாக பயன்படுத்தவில்லை என பொதுமக்கள் புகார்...

நாமக்கல் : நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே சமத்துவபுரத்தில் உள்ள வீடுகளை சீரமைக்க ஒதுக்கப்பட்ட நிதி சரியாக பயன்படுத்த படவில்லை என்றும், இது தொடர்பாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் அந்தனூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 1999 ஆம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியால் பெரியார் நினைவு சமத்துவபுரம் அமைக்கப்பட்டது. இதில், 100 பயனாளிகளுக்கு வீடுகள் ஒதுக்கப்பட்டன.

அங்குள்ள வீடுகள் பழுதடைந்துள்ளதால் சீரமைப்பு பணிகளுக்காக முதலமைச்சர் நிதியை ஒதுக்கி உத்தரவிட்டார். ஒரு வீட்டிற்கு 50,000 ரூபாய் என மொத்தம் ரூ.20,00,000 லட்சம் வரை இதற்கு நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால், உத்தரவு பிறப்பிக்கப்பட்டு 2 மாதங்களான நிலையில் சில வீடுகளை தவிர மற்ற வீடுகளில் எந்த பணியையும் தொடங்காமல் ஒப்பந்ததாரர்கள் மெத்தனம் காட்டுவதாக அங்கு வசிப்பவர்கள் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு அரசு தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்,  வீடுகளை பழுது பார்க்கும் பணியை விரைவில் முடிக்க வேண்டும் என்றும் அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

Related Stories: