சிறுவனை மிரட்டி ஓரினச்சேர்க்கை அரபி பாடசாலை ஆசிரியர் கைது

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருச்சூர் அருகே 14 வயது சிறுவனை மிரட்டி ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுத்திய பள்ளிவாசல் முன்னாள் இமாமும், அரபி பாடசாலை ஆசிரியருமான பஷீர் சகாபியை போலீசார் கைது செய்தனர்.

கேரள மாநிலம் திருச்சூர் அருகே இரிஞ்சாலக்குடா பகுதியைச் சேர்ந்தவர் பஷீர் சகாபி (52). அந்திக்காடு பகுதியில் உள்ள ஜூம்மா மஸ்ஜித் பள்ளிவாசலில் இமாமாக பணிபுரிந்து வந்தார். மேலும் அங்குள்ள அரபி பாடசாலையில் ஆசிரியராகவும் இருந்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு அரபி பாடசாலைக்கு படிக்க வந்த அந்த பகுதியை சேர்ந்த 14 வயது சிறுவனை மிரட்டி ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டதாக பஷீர் சகாபி மீது புகார் எழுந்தது. இதுகுறித்து அந்திக்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.

இதையடுத்து அவரை இமாம் பொறுப்பில் இருந்து பள்ளிவாசல் நிர்வாகம் நீக்கியது. இதற்கிடையே போலீஸ் கைதுக்கு பயந்து பஷீர் சகாபி தலைமறைவானார். அவரை போலீசார் பல்வேறு இடங்களில் தேடிவந்தனர். இந்த நிலையில் எர்ணாகுளத்தில் தலைமறைவாக இருந்த பஷீர் சகாபியை நேற்று போலீசார் கைது செய்தனர். விசாரணைக்குப் பிறகு போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: