ஆவடி தொகுதியில் பள்ளி மாணவர்களுக்கு இலவச மிதிவண்டி: அமைச்சர் சா.மு.நாசர் வழங்கினார்

ஆவடி: ஆவடி தொகுதிக்கு உட்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் 1 படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசின் சார்பில் காமராஜர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இலவச மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடை

பெற்றது. இதில் தொகுதி எம்எல்ஏவும் பால்வளத்துறை அமைச்சருமான சா.மு.நாசர் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார்.

 

இந்நிகழ்ச்சியில் ஆடிவ அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி, திருநின்றவூர் அரசு மேல்நிலை பள்ளி, தண்டுரை அரசு மேல்நிலை பள்ளி, சுந்தரசோழபுரம் அரசு மேல்நிலை பள்ளி, ஆவடி ஆர்சிஎம் மேல்நிலை பள்ளிகளில் பிளஸ் 1 படிக்கும் 471 மாணவர்கள், 774 மாணவிகள் என மொத்தம் 1245 மாணவர்களுக்கு ரூ.63.12 லட்சம் மதிப்பிலான இலவச மிதிவண்டிகளை அமைச்சர் சா.மு.நாசர் வழங்கினார். இதேபோல் ஆவடி, இமாகுலேட் பெண்கள் மேல்நிலை பள்ளியில் 687 மாணவிகளுக்கு ரூ.34.29 லட்சம் மதிப்பில் இலவச மிதிவண்டிகளையும் அமைச்சர் சா.மு.நாசர் வழங்கினார்.

 

இதில் ஆவடி மாநகர மேயர் உதயகுமார், துணைமேயர் சூரியகுமார், ஆணையர் தர்ப்பகராஜ், மண்டல குழு தலைவர் ஜோதிலட்சுமி நாராயணபிரசாத், திருவேற்காடு நகரமன்றத் தலைவர் என்இகே.மூர்த்தி, திருநின்றவூர் நகராட்சி தலைவர் உஷாராணி தி.வை.ரவி, சுகாதார அலுவலர் ஆல்பர்ட் அருள்ராஜ், கல்வி மண்டல குழு தலைவர் கீதா யுவராஜ், பகுதி செயலாளர் ஜி.ராஜேந்திரன், முதன்மை கல்வி அலுவலர் த.ராமன், மாவட்ட கல்வி அலுவலர் சி.ராதாகிருஷ்ணன், பள்ளி துணை ஆய்வாளர் ஆர்.ரவி, தலைமை ஆசிரியர் எஸ்.பிரேமா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: