நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டி: 5 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட்இண்டீஸ் வெற்றி

பிரிட்ஜ்டவுன்: நியூசிலாந்து கிரிக்கெட் அணி வெஸ்ட்இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 3 போட்டிகள் கொண்ட டி.20 தொடரை 2-1 என நியூசிலாந்து கைப்பற்றிய நிலையில் அடுத்ததாக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி பிரிட்ஜ்டவுனில்  இந்திய நேரப்படி நேற்றிரவு 11.30 மணிக்கு தொடங்கி நடந்தது. டாஸ் வென்ற வெஸ்ட்இண்டீஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 45.2 ஓவரில் 190 ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது. அதிகபட்சமாக கேப்டன் வில்லியம்சன்  34, மைக்கேல் பிரேஸ்வெல் 31, ஃபின் ஆலன், சான்ட்னர் தலா 25, கப்டில் 24 ரன் எடுத்தனர். வெஸ்ட்இண்டீஸ் பந்துவீச்சில் அகேல் ஹொசின், அல்சரி ஜோசப் தலா 3, ஜேசன் ஹோல்டர் 2 விக்கெட் வீழ்த்தினர்.

பின்னர் களம் இறங்கிய வெஸ்ட்இண்டீஸ் அணியில் கைல் மேயர்ஸ் 6, கீசி கார்டி11 ரன்னில் வெளியேற ஷாய் ஹோப் 26, கேப்டன் பூரன் 28, ரன் அடித்தனர். அதிகபட்சமாக ஷமர் ப்ரூக்ஸ் 79 ரன் எடுத்தார். 39 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 193 ரன் எடுத்த வெஸ்ட்இண்டீஸ் 5 விக்கெட் வித்தியாசத்தில்  வெற்றிபெற்றது. ஹோல்டர் 13, பிளாக்வுட் 12 ரன்னில் களத்தில் இருந்தனர். ஷமர் ப்ரூக்ஸ் ஆட்டநாயகன் விருது பெற்றார். 2வது போட்டி நாளை நடக்கிறது.

Related Stories: