வீட்டில் பதுக்கிய ரூ.1 கோடி கடல் அட்டை பறிமுதல்

நாகை: நாகையில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.1 கோடி மதிப்பிலான கடல் அட்டையை குற்றப்பிரிவு போலீசார் நேற்று பறிமுதல் செய்தனர். நாகை கீரைக்கொல்லையில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் தனியாக உள்ள ஒரு வீட்டில் கடல் அட்டைகள் பதுக்கி வைத்திருப்பதாக குற்றப்பிரிவு போலீசாருக்கு  ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து போலீசார் நேற்று அங்கு சென்று பார்த்த போது, அந்த வீட்டில் 4 பிளாஸ்டிக் பேரல்களில் 550 கிலோ பதப்படுத்திய கடல் அட்டைகள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.1 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. இதையடுத்து கடல் அட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், வழக்கு பதிந்து கடல் அட்டைகளை பதுக்கியவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: