16 வயது சிறுமி கர்ப்பம்: வாலிபர் அதிரடி கைது

பெரம்பூர்: சென்னை ஓட்டேரி மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த 36 வயது பெண், புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது; எனது உறவுக்கார நபரான கமல் (21) என்பவர் அடிக்கடி எனது வீட்டிற்கு வருவார். அப்போது அவர் எனது 16 வயது மகளுடன் பழகி வந்தார்.

ஒருநாள் எனது மகள், வயிறு வலிக்கிறது என்று கூறியதால் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்று காண்பித்தபோது ஐந்து மாத கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர். இதனால் கடும் அதிர்ச்சி அடைந்தேன். இதுகுறித்து விசாரித்தபோது கமல்தான், மகளிடம் ஆசை வார்த்தை கூறி உடலுறவு வைத்துக்கொண்டது தெரிந்தது.

எனவே கமல் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.இவ்வாறு புகாரில் தெரிவித்திருந்தார்.

இந்த புகாரின் அடிப்படையில், புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரித்து போக்சோ சட்டத்தின் கீழ் கமலை கைது செய்தனர். அவரிடம் நடத்தப்படும் விசாரணைக்கு பிறகு சிறையில் அடைக்கப்படுவார் என்று தெரிகிறது.

Related Stories: