சென்னை அரும்பாக்கம் வங்கிக் கொள்ளை வழக்கில் அச்சரப்பாக்கம் காவல் ஆய்வாளருக்கு தொடர்பு?

சென்னை: சென்னை அரும்பாக்கம் வங்கியில் கொள்ளையடிக்கப்பட்ட தங்கத்தில் 3.7 கிலோ தங்கம் காவல் ஆய்வாளர் வீட்டில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அரும்பாக்கம் கொள்ளை சம்பவத்தில் ஏற்கெனவே 11 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, அதில் 4 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டிருந்தனர். இதில் முதல்கட்டமாக 18 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. 2ம் கட்டமாக சூர்யா என்ற கொள்ளையனின் நண்பர் வீடான விழுப்புரத்தில் 10 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. மொத்தமாக 28 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டு இருந்த நிலையில், மொத்த நகைகளையும் காவல்துறை மீட்டதாக தகவல் தெரிவித்தது.

ஆனால், நகை பறிமுதல் செய்யப்பட்டதிலும், வங்கியில் நகை கொள்ளைபோன மொத்த அளவிலும் ஒரு குழப்பம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, மீட்கப்பட்ட நகைகளை மீண்டும் ஆய்வு செய்து, எவ்வளவு நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது? காணாமல் போனதாக கூறப்படும் நகையின் மதிப்பு என்ன? என்பது பற்றி விரிவான ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதனடிப்படையில், கைது செய்யப்பட்ட கொள்ளையர்களை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டு, 5 நாள் காவலில் சந்தோஷ், பாலாஜி என்ற 2 குற்றவாளிகளை விசாரித்து வந்தனர். இந்நிலையில், கைது செய்யப்பட்ட சந்தோஷ் என்பவரின் உறவினர் அச்சரப்பாக்கம் காவல் ஆய்வாளர் அமல்ராஜ் என்பது தெரியவந்தது.

இவருக்கும், கொள்ளையனுக்கும் தொடர்பு இருப்பதன் காரணத்தினால் அவரது வீட்டில் தங்க நகைகள் இருக்க வாய்ப்புள்ளதாக கருதி, போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில், அவரது வீட்டில் 3.7 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது. இதனால், காவல் ஆய்வாளர் அமல்ராஜிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் எந்த அடிப்படையில் அவருக்கு தொடர்புள்ளள்ளது? அல்லது மறைத்து வைக்க மட்டும் கொள்ளையன் பயன்படுத்தினானா? என்ற பல்வேறு கோணத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

Related Stories: