ஆன்லைன் ரம்மியை தடை செய்வதற்கான சட்டத்தை இயற்றுவது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

சென்னை: ஆன்லைன் ரம்மியை தடை செய்ய அவசர சட்டம் இயற்றுவது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். ஆலோசனையில் உள்துறை செயலாளர், தலைமை செயலாளர் இறையன்பு, உளவுத்துறை ஏடிஜிபி, டிஜிபி சைலேந்திர பாபு, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி உள்ளிட்ட உயரதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுடன் ஆலோசனை நடைபெற்று வருகிறது. கடந்த 11,12,13 ஆகிய தேதியில் பொதுமக்களிடமும், ஆன்லைன் விளையாட்டுகளை நடத்தக்கூடிய நிறுவன நிர்வாகிகளிடமும் கருத்து கேட்கப்பட்டது. இதில் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு ஒன்றை அமைத்தது.

அந்த குழுவின் ஆய்வு அறிக்கை ஒரு மாதத்திற்கு முன் அரசிடம் அளிக்கப்பட்டது. இதில் அரசியல்கட்சி தலைவர்களும் கருத்துக்களை தெரிவித்துள்ளனர். மேலும், இந்த அவசர சட்டத்தை எவ்வாறு செயல்படுத்தலாம் என்பது குறித்து இறுதிக்கட்ட ஆலோசனை நடைபெற்று வருகிறது. இதற்கு முன்பு இதுகுறித்து தலைமை செயலாளர் ஆலோசனை நடத்தியுள்ள நிலையில், தற்போது தலைமை செயலகத்தில் முதல்வர் இறுதிக்கட்ட ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். மேலும், ஆன்லைன் விளையாட்டுகளில் ஒருசில கேம்களில் மட்டும் ஒழுங்குமுறைகள் மற்றும் தடை விதிக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதுகுறித்து ஒருசில விளையாட்டு நிறுவனங்கள் தெரிவிக்கையில், நாங்கள் செயல்படுத்தும்  விளையாட்டுகள் அனைத்தும் விளையாட்டுகள் மட்டுமே. ஒரு சில விளையாட்டுகள் குழந்தைகளின் திறனை வளர்க்க கதை சொல்லி விளையாட்டை நடத்துவதால் எவ்வித இழப்பும் ஏற்படுவதில்லை என தெரிவித்துள்ளனர். இந்நிலையில், ஆன்லைன் விளையாட்டுகளை 3 வகைகளாக பிரித்து, அதில், ஒருசில விளையாட்டுகளில் முழு தடை இருக்கும் எனவும், ஒரு சில விளையாட்டுகளில் சூதாட்டம் இருக்காது என்ற வரைமுறைகளுடன் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: