ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

சென்னை: ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில்; பிரதமர் மோடி, அமித்ஷா, ராஜ்நாத் சிங், உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், மாண்புமிகு மத்திய நிதியமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். மகிழ்ச்சியும், நல்ல ஆரோக்கியம் பெற உங்களுக்கு வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார்.

Related Stories: