ஏவுகணைகளை அடுத்தடுத்து சோதிக்கும் வடகொரியா: ஒரே நாளில் 2 ஏவுகணைகளை செலுத்தி பரிசோதனை

பியோங்யாங்: ஒரே நாளில் இரண்டு அதிநவீன ஏவுகணைகளை செலுத்தி வடகொரியா சோதனை நடத்தியிருப்பது கொரிய தீபகற்பத்தில் பதற்றத்தை அதிகரித்துள்ளது. பொருளாதார தடைகளை திரும்ப பெறுவதற்கு அமெரிக்கா, தென் கொரியா உள்ளிட்ட நாடுகளுக்கு அழுத்தம் கொடுக்கும் விதமாக வடகொரியா தொடர்ந்து ஏவுகணைகளை விண்ணில் செலுத்தி சோதனை செய்து வருகிறது. வடகொரியாவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக தென் கொரியாவுடன் அமெரிக்க படைகள் இணைந்து கொரிய கடல் பகுதியில் அவ்வப்போது கூட்டு ராணுவ பயிற்சிகளையும் நடத்தி வருகின்றனர். அந்த வகையில் அடுத்த வாரம் கூட்டு பயிற்சியில் ஈடுபட இருப்பதாக இரு நாடுகளும் சமீபத்தில் அறிவித்திருந்தன.

இந்நிலையில் வடகொரியா நேற்று ஒரே நாளில் 2 நவீன வகை ஏவுகணைகளை அடுத்தடுத்து சோதனை நடத்தி அண்டை நாடுகளான தென்கொரியா மற்றும் ஜப்பானுக்கு அதிர்ச்சி அளித்தது. தலைநகர் பியோங்யாங் அருகே மேற்கு கடலில் நிறுத்தப்பட்டிருந்த 2 கப்பல்கள் மூலம் ஆயுதங்களை சுமந்து சென்று தாக்கும் அதிநவீன ஏவுகணைகள் பரிசோதிக்கப்பட்டன. தென் கொரியாவின் அதிபராக யூன் சுக்-இயோ பதவியேற்று 100 நாட்கள் நிறைவடைந்த நிலையில் வடகொரியா நேற்று ஏவுகணை சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

Related Stories: